வரட்டு இரும்பலால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு டீஸ்பூன் இதனை குடித்தால் போதும்!
இந்த பனி காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்டிபயாட்டிக் தன்மை இருப்பதால் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தேன் தொண்டையில் ஏற்பட்டுள்ள கரகரப்பை நீக்க உதவுகிறது.
அதில் ஒரு சிட்டிகை அளவு ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூன் முழுவதுமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வரட்டு இருமல் அதிகமாக இருந்தால் நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை கூட நாம் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இதனை நாம் எடுத்துக் கொண்டால் அதன் பிறகு 10 அல்லது 15 நிமிடங்கள் தண்ணீர் பருக கூடாது. அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். பசியின்மையை தூண்டும். இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது அரை டீஸ்பூன் அளவிற்கு கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கும் நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்கு முறை கொடுக்கலாம். இதனை வறட்டு இருமல் அதிகமாக இருக்கும் நேரத்தில் எடுத்துக் கொண்டால் நல்ல பயன் கிடைக்கும்.