நீண்ட நாட்களாக வாய்ப்புண் பிரச்சனையை அனுபவிக்கிறீர்களா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க!!

0
146
Suffering from long-term sleep problems? So try this grandmother's remedy!!
Suffering from long-term sleep problems? So try this grandmother's remedy!!

அல்சர் வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

1)நெருஞ்சில் இலை
2)தண்ணீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு சிறிதளவு நெருஞ்சில் இலையை நீரில் அலசி சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அரைக்கவும்.அதன் பின்னர் இந்த நெருஞ்சில் சாறை அடுப்பில் வைத்துள்ள பாத்திரத்திற்கு வடிகட்டி கொதிக்க விடவும்.

இதை 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.அதன் பின்னர் இந்த கசாயத்தை ஆறவிட்டு ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி பருகினால் வாய்ப்புண்கள் ஆறும்.

1)தேங்காய் பால்
2)தேன்

ஒரு கப் தேங்காய் துண்டுகளை நீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும்.

இந்த தேங்காய் பாலில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் வாய்ப்புண் அல்சர் புண் அனைத்தும் குணமாகும்.

1)நெல்லிக்காய்
2)மாவிலை

ஒரு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.அதன் பின்னர் மாவிலை ஒன்றை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

இந்த சாறை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் முழுமையாக குணமாகும்.

1)அகத்தி இலை
2)தண்ணீர்

கால் கைப்பிடி அகத்தி இலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நைஸாக அரைக்கவும்.

இந்த அகத்தி விழுதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி சிறிது தண்ணீர் ஊற்றி பருகி வந்தால் வாய்ப்புண் முழுமையாக குணமாகும்.

1)ஓதியம் பட்டை
2)தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி ஓதியம் பட்டையை போட்டு சில மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பிறகு இதை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் புண்கள் ஆறும்.