முடக்கு வாதத்தால் அவதியா? இந்த ஒரு இலையை கொதிக்க வைத்து குடித்தால் நிமிடத்தில் ரிலீஃப் கிடைக்கும்!!

Photo of author

By Gayathri

வயதானவர்களை அதிகம் தாக்கும் நோய் பாதிப்புகளில் ஒன்று முடக்குவாதம்.ஆண்களை ஒப்பிடுகையில் பெண்களே இந்த பாதிப்ப்பால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.முழங்கால் மூட்டு பகுதியில் உண்டாகும் இந்த முடக்குவாதம் நாளடைவில் மூட்டு வலி,மூட்டு வீக்கம்,எலும்பு குறைபாடுகளை ஏற்படுத்தும்.

இந்த முடக்குவாதத்தை போக்க நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த கை வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.முடக்கு வாதத்திற்கான சிறந்த கைமருந்து வாதநாராயணன் இலை.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடக்குவாதம்,மூட்டு தேய்மானம்,எலும்பு குறைபாடு போன்றவற்றை சரிசெய்கிறது.

வாதநாராயணன் பானம்

தேவையான பொருட்கள்:-

1)வாதநாராயணன் இலை – ஒரு கப்
2)மிளகு – 10
3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் 10 மிளகு எடுத்து உரலில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்குங்கள்.அதற்கு அடுத்து இடித்து வைத்துள்ள கரு மிளகு சேர்த்து கலந்து விடுங்கள்.

பிறகு ஒரு கப் வாத நாராயணன் இலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொதிக்கும் கலவையில் சேர்க்கவும்.10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைத்து ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடித்து வந்தால் முடக்குவாதம் சரியாகும்.

வாதநாராயணன் இலை சூப்

தேவையான பொருட்கள்:-

1)வாதநாராயணன் இலை – 1/4 கப்
2)பூண்டு – நான்கு பல்
3)மிளகு – ஐந்து
4)உப்பு – சிறிதளவு
5)மஞ்சள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் 1/4 கப் வாத நாராயணன் இலை,தோல் நீக்கிய பூண்டு நான்கு பற்கள்,ஐந்து இடித்த மிளகு,சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.பிறகு இதை ஆறவிட்டு குடித்தால் முடக்குவாதம் சரியாகும்.