சர்க்கரை நோய்: மளமளவென ஏறிய சுகரை 10 நிமிடத்தில் கண்ட்ரோல் செய்யும் மூலிகை வைத்தியம்!!
உடலை உருக்கும் சர்க்கரை நோய் குணமாக்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.மாறிய உணவு பழக்கங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.நம் இந்தியாவில் பெரும்பாலும் பரம்பரைத் தன்மையால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.இதை கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம்.
முதல் தீர்வு:
1)பெரிய நெல்லிக்காய்
2)சுருள் பட்டை
3)சீரகம்
இரண்டு பெரிய நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு அதன் சதை பற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு துண்டு சுருள் பட்டை எடுத்து அதனை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
சுருள் பட்டை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.சமையலுக்கு பயன்படுத்தும் இலவங்கப்பட்டையின் தோற்றத்தில் சுருள் பட்டை இருக்கும்.
பின்னர் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த மூன்று பொருட்களை வைத்து சர்க்கரையை கட்டுப்படுத்தக் கூடிய மூலிகை கசாயம் செய்ய வேண்டும்.
அதற்கு ஒரு மீடியம் சைஸ் பாத்திரம் எடுத்து அ 200 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு நறுக்கி வைத்திருக்கும் பெரிய நெல்லிக்காய் துண்டுகள்,சுருள் பட்டை துண்டுகள் மற்றும் சீரகத்தை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்கவும்.இந்த பானத்தில் இனிப்பு பொருட்கள் சேர்க்கக் கூடாது.அவ்வாறு சேர்த்தால் இந்த பானம் பலனளிக்காது.
இரண்டாது தீர்வு:
1)கோதுமை
2)வெந்தயம்
3)நெய்
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.
மறுநாள் கோதுமை ஊற வைத்த நீரை வடிகட்டி விட்டு கோதுமையை வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரை தேக்கரண்டி பசு நெய் சேர்த்து சூடேற்றவும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.
தற்பொழுது ஒரு பாத்திரம் எடுத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு அரைத்த கோதுமை மாவு மற்றும் வெந்தயப்பொடி சேர்த்து கஞ்சி பதத்திற்கு காய்ச்சி குடித்து வந்தால் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு மெல்ல மெல்ல கட்டுப்படும்.
மூன்றாது தீர்வு:
1)பனங்கிழங்கு
ஒரு பனங்கிழங்கை வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும்.