இமாச்சல் பிரதேச முதல்வராகிறார் சுக்விந்தர் சிங் சுகு.. இன்று பதவியேற்பு..!

0
231

சுக்விந்தர் சிங் சுகு இன்று இமாச்சல் பிரதேச முதல்வராக பதவியேற்கிறார்.

கடந்த மாதம் 12ம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜவிற்கு இடையே கடும் போட்டி நிலவியது. 1985ம் ஆண்டு முதல் அங்கு நடைபெற்ற தேர்தல்களில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதால் இந்த தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்த தேர்தலில் 75.6 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 68 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், 40 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இந்த அபரா வெற்றியை அடுத்து இமாச்சல் பிரதேசத்தில் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கி நடத்திய சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இன்று காலை 11 மணிக்கு சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக பதவியேற்க உள்ளார். துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்க உள்ளார். சிம்லாவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஎஸ்பிஐ ஏடிஎம் இருந்தால் போதும்…மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம் ! எப்படி தெரியுமா?
Next articleதபால் அலுவலகத்தின் ஏடிஎம் பற்றி தெரியுமா? அதன் விதிகள் என்னென்னெ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here