தபால் அலுவலகத்தின் ஏடிஎம் பற்றி தெரியுமா? அதன் விதிகள் என்னென்னெ?

0
155

வங்கிகளில் உள்ள வசதிகளை போலவே தபால் நிலையங்களிலும் பல வசதிகள் உள்ளது. வங்கிகளை போலவே தபால் நிலையங்களிலும் சேமிப்புக் கணக்குகள், ஏடிஎம், நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகளையும் பெறலாம். வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கிற்கு நீங்கள் ஏடிஎம் பெற்றுக்கொள்வீர்களோ அதேபோல தபால் நிலையத்தின் சேமிப்புக் கணக்கிற்கும் நீங்கள் ஏடிஎம் பெற்றுக்கொள்ளலாம். வங்கியின் ஏடிஎம் டிரான்ஸாக்ஷன்கள் பற்றி நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தபால் நிலைய ஏடிஎம் ட்ரான்ஸாக்ஷன்களின் விதிகள் பற்றி பெரியளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது இதன் டிரான்ஸாக்ஷன்கள் பற்றி காண்போம்.

1) இந்திய போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, அஞ்சலக சேமிப்புக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஏடிஎம் கார்டு மூலம் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக ரூ.25,000 வரை பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

2) ஒரு டிரான்ஸாக்ஷனுக்கு அதாவது ஒரே நேரத்தில் ரூ.10,000 வரை ஏடிஎம்-லிருந்து பணத்தை எடுக்கலாம்.
தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் எந்தவொரு தபால் அலுவலக ஏடிஎம்-ல் இருந்தும் பணம் எடுக்கலாம், அதற்கு நீங்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை.

3) தபால் அலுவலக ஏடிஎம் கார்டு மூலம் மெட்ரோ நகரங்களில் 3 இலவச டிரான்ஸாக்ஷன்களையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 இலவச டிரான்ஸாக்ஷன்களையும் செய்யலாம்.

4) ஏதேனும் வங்கியின் ஏடிஎம் மையத்தில் இலவச டிரான்ஸாக்ஷன் வரம்பை மீறி நீங்கள் பணம் எடுத்தால், ரூ.20 + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.

5) தபால் அலுவலகம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து தபால் அலுவலக ஏடிஎம்களிலிருந்தும் இலவசமாக டிரான்ஸாக்ஷன்கள் செய்துகொள்ளும் வசதியை வழங்குகிறது. இருப்பினும் ஒரு நாளில் 5 டிரான்ஸாக்ஷன்களை மட்டுமே செய்ய முடியும்.

6) பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு தபால் அலுவலகம் இலவச டிரான்ஸாக்ஷன்களையே வழங்குகிறது.

author avatar
Savitha