நீங்கள் அடிக்கடி தலைவலி,தலைபார பிரச்சனையை சந்தித்து வருபவராக இருந்தால் சுக்கு மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தைலம் தயாரித்து பய்னபடுத்துங்கள்.
தலைவலி,தலைபாரம்,மூக்கடைப்பு,மார்பு சளி,ஒற்றைத் தலைவலி போன்ற பல பாதிப்புகளுக்கு சுக்கு தைலம் மருந்தாக திகழ்கிறது.
தேவையான பொருட்கள்:
1)சுக்கு – ஒரு துண்டு
2)நல்லெண்ணெய் – 50 மில்லி
பயன்படுத்தும் முறை:
ஸ்டெப் 01:
ஒரு துண்டு சுக்கை எடுத்து ஒரு கத்தி கொண்டு அதன் தோலை சீவி அப்புறப்படுத்திவிட வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடானதும் தோல் நீக்கி வைத்துள்ள சுக்கை போட்டு வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.
ஸ்டெப் 03:
சுக்கு நன்கு வறுபட்ட பிறகு அதை நன்கு ஆறவைத்து ஒரு மிக்சர் ஜார் அல்லது கல்வத்தில் போட்டு நைஸ் பவுடர் பத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
அடுத்து அடுப்பில் இரும்பு வாணலி வைத்து சூடானதும் 50 மில்லி எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.செக்கில் ஆட்டிய எண்ணையை பயன்படுத்தினால் மட்டுமே பலன் கிடைக்கும்.ஆகவே செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 05:
நல்லெண்ணெய் நன்கு சூடானதும் அரைத்து வைத்துள்ள சுக்கு பொடியை கொட்டி மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும்.சுக்கு அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது கரண்டி கொண்டு கலந்துவிட வேண்டும்.
ஸ்டெப் 06:
நல்லெண்ணெய் மற்றும் சுக்கு கலவை கெட்டியாகும் வரை குறைவான தீயில் தைலம் காய்ச்ச வேண்டும்.சரியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சுக்கு தைலத்தை ஆறவிட வேண்டும்.
ஸ்டெப் 07:
இந்த தைலத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.தலைவலி,மூக்கடைப்பு,தலைபாரம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட இந்த சுக்குத் தைலத்தை பயன்படுத்தலாம்.
மேலும் சுக்கை தூளாக பொடித்து தண்ணீரில் குழைத்து நெற்றில் மீது பூசினால் கடும் தலைவலி தொந்தரவு நீங்கும்.மார்பு சளி பாதிப்பு தொடர்ந்தால் சுக்குத் தூளை நல்லெண்ணெயில் போட்டு லேசாக சூடுபடுத்தி மார்பு மீது பூசினால் கெட்டி சளி கரைந்து வந்துவிடும்.