7 நாளில் கையில் உள்ள சுருக்கம்
மறைந்துவிடும்!! கை வெள்ளையாக மாறிவிடும்!!
தற்போதைய இளம் வயதினரின் கைகளைப் பார்த்தால், அவர்களின் கை மட்டும் சுருக்கம் அதிகமாக வயதானவரின் கைகளைப் போன்று காணப்படும். அதற்கு முக்கிய காரணம், அவர்கள் கைகளுக்கு போதிய பராமரிப்பு கொடுக்காதது தான்.
அதுமட்டுமின்றி, வெளியே வெயிலில் செல்லும் போது, கைகளில் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், கைகள் கருப்பாக மாறுவதுடன், கைகளில் நீர்ச்சத்தானது குறைந்து சுருக்கங்களை அதிகமாக்கும்.
ஆகவே முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்புக்களைப் போலவே, கை மற்றும் கால்களுக்கு கொடுத்து வர வேண்டியது அவசியம்.
எனவே இதுபோன்ற கை சுருக்கங்களை நீக்குவதற்கு இயற்கை ஆன முறையில் வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம் பார்க்கலாம்.
முதலில் ஸ்க்ரப்பிங் முறையை பார்க்கலாம்:
தேவையான பொருள்கள்:
சக்கரை
காபி பவுடர்
கற்றாழை ஜெல்
செய்முறை:
1: முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை ஒரு ஸ்பூன் அளவிற்கு காபி பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
2: பின்பு அதனை எடுத்து நம் கைகளில் நன்றாக மசாஜ் செய்யவும்.
கற்றாழை பயன்படுத்துவதனால் நம் கைகளில் உள்ள டெத் செல்ஸ் அனைத்தும் நீங்கிவிடும் நம் கைகளுக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். இதனை ஒரு ஐந்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்து பின்பு கைகளை கழுவிக்கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்:
ஆமணக்கு எண்ணெய்
இதை பயன்படுத்தினால் நம் முகத்திற்கு நல்ல புத்துணர்ச்சியைத் தரும் கைகளில் உள்ள ஈரம் பதம் நீக்கி கைகள் சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக தெரியும்.
வைட் பியூட்டி கிரீம்ஏதாவது ஒரு மாஸ்டரைசர் கிரீம்
இதனை பயன்படுத்துவதனால் நல்ல ஒரு கிரீம் டெக்சர் போல இருக்கும் அதே போன்று கைகளுக்கும் நல்ல ஒரு பளபளப்பை தரும்.
கற்றாழை ஜெல்
செய்முறை:
1: முதலில் ஒரு கிண்ணத்தில் அரை ஸ்பூன் அளவிற்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவிற்கு மாஸ்டர் கிரீம் அல்லது பியூட்டி கிரீம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளவும்.
2: ஸ்க்ரப்பர் பயன்படுத்துவதற்கு பிறகு இதனை நாம் கைகளில் பயன்படுத்தி இரவு முழுக்க விட்டு காலையில் கழுவ வேண்டும்.
இதனை பயன்படுத்தினால் நம் கைகளில் உள்ள கருமை சுருக்கம் இது போன்ற அனைத்தும் நீங்கிவிடும் நம் கைகள் இளமையாக தோன்றும்.
நம் உடலில் நீர்ச்சத்து கம்மியாக இருந்தால் தான் சுருக்கங்கள் ஏற்படும். எனவே அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் நீர்ச்சத்து உள்ள பொருள்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.