Summer Diseases: ஹோம் மேட் வியர்க்குரு பவுடர் பயன்படுத்துங்கள்!! நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும்!!

Photo of author

By Divya

Summer Diseases: ஹோம் மேட் வியர்க்குரு பவுடர் பயன்படுத்துங்கள்!! நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும்!!

சம்மரில் சந்திக்க கூடிய தோல் பிரச்சனைகளில் ஒன்று வியர்க்குரு.இவை அனைவருக்கும் வரக் கூடிய பாதிப்பு தான்.உடலில் இருக்கின்ற நீர் வியர்வையாக வெளியேறி அவை தோல்களில் மீது சிறு சிறு கொப்பளங்களாக உருவெடுத்து விடுகிறது.

இந்த வியர்க்குருவை குணமாக்க கடைகளில் விற்க கூடிய பவுடர்களை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டு முறையில் வேப்பிலை,வேப்பம் பூ உள்ளிட்ட பொருட்களை கொண்டு இயற்கையான வியர்க்குரு பவுடர் தயாரித்து சருமத்திற்கு பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை
2)கஸ்தூரி மஞ்சள் தூள்
3)வேப்பம் பூ
4)வேப்பம் பட்டை
5)குப்பைமேனி இலை
6)வெட்டி வேர்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை,கால் கைப்படி அளவு வேப்பம் பூ,வேப்பம் பட்டை,குப்பைமேனி இலை மற்றும் வெட்டி வேரை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

தொட்டால் தூளாகும் அளவிற்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்யவும்.நைஸ் பவுடராகும் வரை அரைக்க வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து விட்டால் இயற்கையான வியர்க்குரு பவுடர் தயாராகி விடும்.

இந்த வியர்க்குரு பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.தினமும் குளித்து முடித்த பின்னர் இந்த வியர்க்குரு பவுடரை உடலில் பூசிக் கொள்ளவும்.

இவ்வாறு செய்வதால் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது கட்டுப்படும்.வியர்க்குரு புண்கள் இருந்தால் அவை முழுமையாக ஆறிவிடும்.

கடைகளில் விற்க கூடிய கெமிக்கல் வியர்க்குரு பவுடர்களை காட்டிலும் இந்த இயற்கை வியர்க்குரு பவுடர் 100 மடங்கு பலன் கொடுக்க கூடியவை.