தற்பொழுது குளிர்காலம் முடிந்து கோடை வெயில் மெல்ல மெல்ல எட்டி பார்க்கத் தொடங்கியிருக்கிறது.மாலை நேரத்து வெயில் பகல் நேர வெயில் போன்று சுட்டெரிக்கிறது.கடந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.பகல் நேரத்தில் வெளியில் தலை காட்ட முடியாத நிலையில் தான் கடந்த கோடை காலத்தை கடந்தோம்.அப்படி இருக்கையில் தற்பொழுது வர உள்ள கோடை காலம் இன்னும் மோசமான பாதிப்புகளை தான் நமக்கு தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆகவே கோடை காலத்திற்கு முன்பே நாம் சில முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொண்டால் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.பகல் நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள்,குழந்தைகள்,முதியவர்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உடலில் நீர் இழப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.உடலில் நீர் இழப்பை சரி செய்ய அதிக தண்ணீர் அருந்த வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.
கோடை காலத்தில் உடல் சூடு,அம்மை நோய்,வியர்க்குரு,சரும பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஆரோக்கிய உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
சூடான மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பழசாறு பருகலாம்.குளிர்பானம் பருகுவதை தவிர்த்துவிட்டு பழங்களில் இருந்து சாறு எடுத்து பருகலாம்.
சுரைக்காய்,புடலை போன்றவை நீர்ச்சத்து நிறைந்த காய்கறியாகும்.இதை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் வறட்சியாவது குறையும்.தர்பூசணி,முலாம்பழம்,வெள்ளரிப்பழம் போன்றவற்றை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
தினமும் ஒரு இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.மோர்,சிட்ரஸ் பழச் சாறு பருகி வந்தால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்.நுங்கு கிடைத்தால் வாங்கி சாப்பிடவும்.
கேரட்,முட்டைகோஸ்,தக்காளி,முள்ளங்கி போன்ற காய்கறிகளை உணவாக எடுத்துக் கொண்டால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்.செலரி கீரையில் சாலட் செய்து சாப்பிட்டு வந்தால் நீர்ச்சத்து அதிகரிக்கும்.உடல் வறட்சியை தடுக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.குடை மிளகாய்,பீர்க்கன் போன்ற காய்கறிகளை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் வறட்சியாவது கட்டுப்படும்.