கொளுத்தி எடுக்கும் கோடை காலம் தொடங்கிவிட்டது.கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெயில் சுட்டெரித்து வருகிறது.காலை நேரத்திலேயே அதிகமான வெயில் தாக்கம் மற்றும் வெப்ப காற்று வீசுகிறது.
இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளால் அனைவரும் அவதியடைந்து வருகின்றோம்.கடும் வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து எந்த உணவு சாப்பிட்டாலும் வயிறுக் கோளாறை ஏற்படுத்திவிடுகிறது.
மற்ற பருவ காலங்களைவிட கோடை காலத்தில் உணவுமுறை பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.கோடை கால சூட்டை தணித்துக் கொள்ள நீராகாரங்களை அதிகாமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.இளநீர்,நுங்கு,வெள்ளரி சாறு,மோர் போன்ற குளிர்ச்சி நிறைந்த பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.அதேபோல் முலாம் பழம்,தர்பூசணி பழம்,வெள்ளரி பழம் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் சிலவகை பழங்கள் கோடை உஷ்ணத்தை அதிகமாக்கிவிடும்.அவை என்ன பழங்கள் என்று நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த பழங்கள் கோடை காலத்தில் தான் விளைச்சலுக்கு வரும்.
உடல் உஷ்ணத்தை அதிகமாக்கும் பழங்கள்:
1)அத்தி
2)மாம்பழம்
3)லிச்சி
4)பப்பாளி
இந்த நான்கு பழங்களும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.இருப்பினும் இந்த பழங்களை கோடை காலத்தில் சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகிவிடும்.
ஏற்கனவே உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் இந்த நான்கு பழங்களை தவிர்க்க வேண்டும்.இந்த பழங்களை அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,தோல் பிரச்சனை ஏற்படும்.அதேபோல் உலர் அத்தி பழத்தை தவிர்க்க வேண்டும்.
மாம்பழம் சுவை மிகுந்த பழம் என்றாலும் இவற்றை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகி தோலில் கட்டிகள்,புண்கள் வந்துவிடும்.இந்த வெயில் காலத்தில் இதுபோன்ற சூட்டை கிளம்பும் பழங்கள் உட்கொள்வதை தவிர்த்துவிட்டு குளிர்ச்சி தரக் கூடிய பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்.