கோடை சீசன்.. இரசாயனம் கலக்காத தர்ப்பூசணி மாம்பழம் வாங்குவது எப்படி? அவசியம் தெரிந்து கொள்ளுங்க மக்களே!

Photo of author

By Divya

கோடை சீசன்.. இரசாயனம் கலக்காத தர்ப்பூசணி மாம்பழம் வாங்குவது எப்படி? அவசியம் தெரிந்து கொள்ளுங்க மக்களே!

கோடை காலத்தில் பருவகால பழங்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.கோடையில் மட்டும் கிடைக்க கூடிய பழங்கள் என்பதினால் அதை வாங்கி உண்ண மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக மாம்பழம்,தர்பூசணி உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.இந்த பழங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருவதால் அதில் அதிக இராசயனங்கள் கலப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

குழந்தைகள் விரும்பி உண்ணும் பழங்களில் ஆரோக்கியத்தை கெடுக்கும் இரசாயனங்கள் கலக்கப்படுவது மிகப் பெரிய குற்றமாகும்.பெரும்பாலான பழங்கள் கால்சியம் கார்பைடு கற்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகிறது.

இவை உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பதினால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் சட்ட விரோதமாக சிலர் கால்சியம் கார்பைடு கற்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கின்றனர்.

அதேபோல் எத்திலீன் வாயுவை பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறது.நேற்று பறித்த காயை ஒரே நாளில் பழமாக்க இது போன்ற செயற்கை முறையை பயன்படுத்துவதால் உயிருக்கு ஆபத்தான நோய்கள் எளிதில் தொற்றி விடும்.நல்ல’காசு பார்க்க மக்களின் உயிரோடு விளையாடும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்கும்.

இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டறிவது எப்படி?

மாம்பழம்

இந்த பழத்தின் காம்பு பகுதி பச்சயாகவும் அதன் சதை பகுதி மஞ்சள் மற்றும் பச்சை கலந்த நிறத்தில் இருந்தால் அவை இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழம் ஆகும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வாங்கிய மாம்பழத்தை போட்டால் அவை நீரில் மூழ்க வேண்டும்.அவ்வாறு இருந்தால் அவை உண்பதற்கு ஏற்ற பழம்.ஒருவேளை அவை தண்ணீரில் மிதந்தால் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழம் என்று அர்த்தம்.

மாம்பழங்களின் மேல் கரும் புள்ளிகள் இருந்தால் அதை வாங்காதீர்கள்.இயற்கையான முறையில் பழுத்த பழத்தின் சதை பற்றை வெட்டுவது சுலபம்.ஆனால் செயற்கையான முறையில் பழுக்கவைப்பட்ட பழத்தை வெட்டுவது கடினம்.இதில் எந்த ஒரு சத்துக்களும் இருக்காது.

தர்பூசணி

தர்பூசணியில் தோல் பகுதி பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறத்திலும் காம்பு பகுதி நன்கு காய்ந்தும் இருந்தால் அவை சுவையானது என்று அர்த்தம்.

தர்பூசணியை நறுக்கி அதனுள் இருக்கும் சதை பற்றின் மீது ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்து துடைக்கவும்.இவ்வாறு செய்யும் பொழுது சிவப்பு நிறம் டிஷ்யூ பேப்பரில் ஓடினால் அதில் கலரிங் சிரப் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.எனவே பழங்கள் உண்ணத் தகுந்ததா என்று கவனமாக பார்த்து வாங்குங்கள்.