ஜீன் 10 வரை பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை நீட்டிப்பு – காரணம் இதுதான்!

0
250
#image_title

ஜீன் 10 வரை பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை நீட்டிப்பு – காரணம் இதுதான்!

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம்அதிகமாக இறுப்பதால் மாணவர்கள் வெயிலின் தாக்கத்தால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் எனவே வருடம் தோறும் ஏப்ரல் மாதத்தில் அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வழக்கமாக மார்ச் மாதம் இறுதி வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதலே கோடை விடுமுறைஅறிவிக்கப்பட்டு ஜீன் ஒன்றாம் தேதி அனைத்து வகுப்புகளுக்குக்கான பள்ளிகளும் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு நாடு முழுவதும் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல்கள் ஏப்ரல் 19 தேதி முதல் ஏழுக்கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் விளவங்காடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஏழுக்கட்டங்களாக ஏப்ரல் பத்தொன்பது தொடங்கிய ஜுன் ஒன்றாம் தேதி வரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, ஜுன் நான்காம் தேதி பெறப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி நடைபெறவுள்ளது.

எனவே பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாலும், தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை ஜீன் பத்தாம் தேதி வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கோடைவிடுமுறை முடிந்து ஜீன் பத்தாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!
Next articleமும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!