முதல்வருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ! கோர்ட்டில் ஆஜராக அதிரடி உத்தரவு!

Photo of author

By Parthipan K

முதல்வருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ! கோர்ட்டில் ஆஜராக அதிரடி உத்தரவு!

Parthipan K

Summons sent to the Prime Minister! Action order to appear in court!

முதல்வருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ! கோர்ட்டில் ஆஜராக அதிரடி உத்தரவு!

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கப்பட்டது என புகார் எழுந்தது.இந்த வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவருடைய உதவியாளரும்மான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்தவருமான பங்கஜ் மிஸ்ராவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக பங்கஜ் மிஸ்ரா கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.அதற்கு முன்னதாகவே சுரங்க குத்தகை குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம்  ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதிவியை தகுதி நீக்கம் செய்ய அம்மாநில ஆளுநர் ரமேஷ் பயாஸ்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில் தற்போது அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் பங்கஸ் மிஸ்ரா உள்ளிட்டவர்களின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவலின் படி அமலாக்க இயக்குநரகம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

மேலும் மாநிலத்தின் சட்டவிரோத சுரங்கம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள மற்ற வழக்குகளையும் அமலாக்க இயக்குநரகம் அவர்களின் விசாரணைக்கு கீழ் எடுத்துக்கொண்டது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் எதிர்கட்சியான பாஜக முதல்வர் சோரன் அவருடைய லாப நோக்கத்திகாக சட்டவிரோதமாக சுரங்க உரிமையை பெறுவதற்காக அவருடைய பதவியை தவறாக பயன்படுத்திவிட்டார்.அவருடைய பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தது .இந்த குற்றச்சாட்டை ஹேமந்த் சோரன் மறுத்திருந்தார்.