ரஜினியை சீண்டிப்பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்! அப்செட்டில் ரஜினி!

Photo of author

By Parthipan K

சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இவர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் திரைப்படங்களில் நடிப்பதை கைவிடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் காலா, கபாலி, தர்பார் போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்ததாகும். இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வசூலையோ அல்லது பெரிய பெயரையோ  தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பேட்டை திரைப்படம் மெகாஹிட்  திரைப்படமாக அமைந்தது என்பது முக்கியமானதாகும். தற்போது இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் ரஜினியை போல பிற உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களை தயாரிக்க உள்ளது.

அதனால்  அண்ணாத்த திரைப்படத்தை  விரைவில் வெளியிட பிளான் செய்துள்ளது.ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியோ, இந்தக் கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்த பிறகு நடித்து தருகிறேன் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்போது சரி என்று ரஜினியிடம் கூறிவிட்டு இப்போது இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் படப்பிடிப்பை துவங்க கட்டளையிட்டுள்ளது. இது ரஜினிக்கு மிகுந்த வருத்தத்தையும், கோபத்தையும் தருகிறது. 

இயக்குனர் சிறுத்தை சிவாவோ சன் பிக்சர்ஸுக்கு ஏற்றவாறு கூறியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ரஜினி இல்லாத காட்சிகளை இப்போது படம்பிடித்து தருவதாகவும், நடிகர் ரஜினி எப்போது கால்சீட் ஒதுக்குகிறாரோ அப்போது அவர் வரும் காட்சிகளை படம்பிடித்து தருவதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைக்கேட்ட ரஜினி மேலும் வருத்தமடைந்துள்ளார்.