ஆர்சிபி க்கு பின்னடைவு : ஆல்ரவுண்டர் விலகல்

0
128

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021ஆம் ஆண்டு ஐபிஎல் இரண்டாவது சீசனில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற்றது. அந்த சமயத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இந்நிலையில் எஞ்சிய போட்டிகள் துபாய், ஓமன், ஷார்ஜா ஆகிய நகரங்களில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக IPL அணிகள் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. பல வெளிநாட்டு வீரர்கள் போட்டியிலிருந்து விலகி உள்ளதால் மாற்று வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் RCB அணியின் முன்னணி ஆல்ரவுண்டரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம்பெற மாட்டார் என்று ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவர் பிளே மற்றும் இக்கட்டான சூழலில் துரிதமாக பந்துவீசி அணிக்கு பக்கபலமாக இருந்த வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து விலகி உள்ளது அந்த அணியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மாற்றாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அணியுடன் இணைக்கப்பட்டு உள்ளார்.

முன்னதாக அந்த அணியின் ஆடம் சாம்பாவுக்கு பதிலாக இலங்கை வீரர் அசரங்காவும் நட்சத்திர பந்துவீச்சாளரான கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் கார்டனும் அணியில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்திய வீரர் வென்ற பதக்கத்தை திரும்பப்பெற்றது ஒலிம்பிக் கமிட்டி!
Next articleபண மோசடி வழக்கில் நடிகை சொன்ன பரபரப்பு தகவல்! யாரெல்லாம் மாட்டுவார்கள்!