சண்டே ஸ்பெஷல்! மூளை மிளகு வறுவல்!

0
162

சண்டே ஸ்பெஷல்! மூளை மிளகு வறுவல்!

தேவையான பொருட்கள் :மூளை இரண்டு , மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் , தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் இரண்டு டீஸ்பூன்.

அரைக்க தேவையான பொருட்கள் : பத்து மிளகு,அரை டீஸ்பூன் சீரகம் ,ஒரு  பட்டை ,இரண்டு கிராம்பு , ஒரு ஏலக்காய்,கால் டீஸ்பூன் சோம்பு ,ஒரு டேபிள் ஸ்பூன் தனியா,    தாளிக்க தேவையான பொருட்கள்: தேவைக்கேற்ப எண்ணெய் ,

தேவைக்கேற்ப டால்டா ,

கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு. செய்முறை : முதலில்  மூளையை மேலே உள்ள மெல்லிய தோலை எடுத்து விட்டு கட் பண்ணி கொள்ள வேண்டாம்.மூளையை மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு இறக்க வேண்டும்.

பொடி செய்ய வேண்டிய பொருட்களை வெறும் வாணலியில் கருக விடாமல் வறுத்து ஆற வைக்க வேண்டும்.அதன் பிறகு அதனை பொடி செய்ய வேண்டும்.

ஒரு இரும்பு வாணலியில் எண்ணெய், டால்டா இரண்டையும் ஊற்றி பொடித்த பொடி முழுவதும் போட்டு வேக வைத்த மூளையையும் போட்டு தண்ணீர் முழுவதும் சுண்ட விட்டு அதை சிறு துண்டுகளாக போட்டு நல்ல முறுகலாக வறுத்தெடுத்து கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.சுவையான மூளை மிளகு வறுவல் ரெடி ஆகிவிடும்.

 

Previous articleKanavu Palangal in Tamil : கட்டிடங்கள் உங்கள் கனவில் வருகின்றதா? இதோ அதற்கான பலன்கள்!
Next articleவிரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!!