பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆகலாம்… சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி!

Photo of author

By Vinoth

பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆகலாம்… சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி!

1992 உலகக் கோப்பைக்கும் 2022 டி20 உலகக் கோப்பைக்கும் இடையே பாகிஸ்தான் அணி ரசிகர்கள் செய்து வரும் ஒப்பீடுகளை பற்றி சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு 1992 உலகக் கோப்பையை தோல்வியுடன் தொடங்கியது, ஆனால் ஒரு அற்புதமான மறுபிரவேசம் செய்து  அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னர் அவர்கள் டேபிள்-டாப்பர் நியூசிலாந்தை தோற்கடித்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

2022 டி20 உலகக் கோப்பையில் அவர்களின் பயணமும் 92 உலகக்கோப்பையை ஒத்ததாக இருந்தது. பாகிஸ்தான் தனது உலககோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான தோல்விகளுடன் தொடங்கியது, ஆனால் தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்து அரையிறுதிக்குள் நுழைந்தது. புதன்கிழமை நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்திய பாபர் ஆசாமின் ஆண்கள் இறுதிப் போட்டியில் தங்கள் இடத்தை பதிவு செய்தனர்.

1992ல் நடந்ததை மீண்டும் பாகிஸ்தான் அணி 2022 டி20 உலகக் கோப்பையை எம்சிஜியில் வெல்லும் என சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த ஒப்பீடுகளுக்கு பதிலளித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளத்தில் கூறியதாவது “இந்த உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்றால், 2048 இல், பாபர் அசாம் பாகிஸ்தானின் பிரதமராக இருப்பார் என்பது உங்களுக்குத் தெரியும்.” என ஜாலியாகக் கூறினார்.

92 உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான் கான் பின்னர் பாகிஸ்தானின் பிரதமர் ஆனார். அதுபோல பாபர் ஆசாமும் பாகிஸ்தானின் பிரதமர் ஆவார் என கவாஸ்கர் பேசியது பலரையும் கவர்ந்துள்ளது.