நாசா: விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.
- கடந்த ஜூன் மாதம் நாசா திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றனர். அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி முடிந்த நிலையில் அவர்கள் கிளம்பும் தருவாயில் அவர்களது விண்கலம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர்.
- மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் புட்ச் வில்மோர் மற்றும் அனைவரும் நலமுடன் இருகின்றனர் என நாசா தெரிவித்துள்ளது. இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்வெளியில் இருக்கும் இவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வலம்வருகிறது. அவர்களுக்கு இந்த நாளில் வான்கோழி இறைச்சி, காய்கறிகள், உருளைக்கிழங்கு, பிஸ்கட், மற்றும் குக்கீகள் என கிறிஸ்துமஸ் உணவுகளும் கொடுக்கப்பட்டது.
- இதற்காக நாசா நவம்பரில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று டன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன என்றும், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பிற அலங்காரங்கள் மற்றும் பரிசுகள் வீரர்களுக்கு அனுப்பப்பட்டன இது தவிர, சில பணி சார்ந்த மற்றும் தொழிநுட்ப்ப பொருட்களும் அவர்களுக்கு இதில் அனுப்பி வைக்கப்பட்டன
என்றும் தெரிவித்துள்ளது.