சன்னி லியோன் யாருன்னே தெரியாது-ஜிபி முத்து வெளிப்படையான பேச்சு!

Photo of author

By CineDesk

சன்னி லியோன் யாருன்னே தெரியாது-ஜிபி முத்து வெளிப்படையான பேச்சு!

சமீபகாலத்தில் பிக் பாஸ் ஷோ மூலம் தனது வெளிப்படையான மற்றும் நகைச்சுவையான பேச்சின் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. இவர் தற்போது சன்னிலியோன் நடித்துள்ள “ஓ மை கோஸ்ட்” படம் ஒன்றில் நடித்து வந்தார். மேலும் இந்த படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார்.

இந்நிலையில் அந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் அவர் பேசிய பேச்சு அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் கூறியதாவது, ரொம்ப சந்தோசமாக இருக்கு, இதுதான் என்னுடைய முதல் படம், இயக்குனரிடம் முதலில் நடிக்க தெரியாது பயமாக இருக்குனு சொன்னேன். அதற்க்கு அவர் கவலைபடாதீங்க சொல்ற படி நடிங்கன்னு சொன்னார்.

படத்தில் சன்னிலியோன் இருப்பதாக கூறினார் முதலில் எனக்கு சன்னிலியோன் யாருனு தெரியாது. சில படங்களில் இவர்தான் சன்னிலியோன் என்று போட்டோவில் காட்டும் போது பார்த்து இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசிய வெளிப்படைதனமான பேச்சு அங்கு கலகலப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தற்போது இவர் பேசிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சன்னிலியோனின் அசாதாரண நடிப்பும் துணிச்சல் மிகுந்தகாட்சிகளும் அவரின் திறமையை இந்த படத்தில் காட்டியுள்ளார்.