நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பௌலிங் தேர்வு செய்தார்.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற 52 வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது.
அதில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பௌலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர் அதிரடியுடன் ஆரம்பித்த அபிஷேக் சர்மா 13 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் கேப்டன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 31 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் பெவிலியன் திரும்பினார் .ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடிய ஜேசன் ராய் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். கடைசியாக ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் படிக்கல் இருவரும் களமிறங்கினர். ஆனால் கேப்டன் விராட் கோலி முதல் ஓவரிலேயே 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த டேனியல் கிறிஸ்டின் வந்த வேகத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவரும் பெவிலியன் திரும்பினார். பெங்களூர் அணியின் விக்கெட்டுகள் ஒரு புறம் சரிந்தாலும், மறுபுறம் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவரும் அவுட்டானார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 137 ரன்கள் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது