11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் !!   ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள் !!

Photo of author

By Jeevitha

11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் !!   ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள் !!

Jeevitha

11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் !!   ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள் !!

சென்னையிலுள்ள சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை மூலம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு அந்த அறக்கட்டளை சார்பாக மாணவர்களை விரைந்து இதனை பயன்படுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ஊக்கத்தொகை பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வித்யாதன் திட்டத்தின் கல்வி தொகையை  அறக்கட்டளை மூலம் வழங்கப்பட உள்ளது .
இந்த ஊக்கத்தொகைக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 80% எடுத்து 11 ஆம் வகுப்பில் சேர்த்த மாணவ, மாணவிகள் விண்ணபிக்கலாம். இந்த ஊக்கத்தொக்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

இதற்கு தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் www.vidyadhan.org என்ற இணையதள முகவரில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதனை பற்றிய தகவலுக்கு 7339659929, 8792459646 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

இதன் மூலம் ஏழை எளிய 11 ஆம் வகுப்பு மாணவருக்கு 12ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.