M.Sc முடித்தவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Photo of author

By Gayathri

தமிழகத்தில் இயங்கி கொண்டிருக்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று பாரதியார் பல்கலைக்கழகம்.தற்பொழுது இதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதன்படி M.Sc முடித்தவர்கள் காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Field Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்:

*Junior Research Fellow
*Field Assistant

காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow மற்றும் Field Assistant பணிக்கு என்று மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் M.Sc படிப்பில் அறிவியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.

தேர்வு முறை:

நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் வழி

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் தங்கள் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பிக்க இறுதி நாள்:

நவம்பர் 28 ஆம் தேதிக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.