ருசியைக் கூட்டும் சூப்பரான சமையல் குறிப்புகள்..!!

0
236

*சாதம் வடிக்கும்போது சற்று குழைவது போல் தெரிந்தால், உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால், மேலும் குழையாமல் இருக்கும்.

*கீரை வகைகள் வேகும் போது அதிலிருந்து ஒரு விதமான நச்சுக் காற்று வெளியேறும். ஆகையால் கீரை வேகும் போது மூடி போட்டு மூடக் கூடாது. அவ்வாறு மூடினால் நச்சுக் காற்று கீரையிலேயே தங்கி உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

*பாகற்காயை இரண்டாக நறுக்கி வைப்பதனால் சீக்கிரம் பழுக்காமல் இருக்கும்.

*பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது.

*சமை​யல் செய்​யும்​போது உடலில் சூடான எண்​ணெய் பட்டு​விட்டால், அந்த இடத்​தில் உருளைக்கிழங்கை அரைத்துப் பூசுவதால் கொப்பளம் ஏற்படாது.

*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து பிசைந்தாள் சப்பாத்தி மற்றும் பூரி மிகவும் சுவையாக இருக்கும்.

*பாலுடன் நான்கைந்து நெல் விதைகளைப் போட்டு வைப்பதனால் வெயில் காலத்தில் பால் திரிந்து போகாமல் இருக்கும்.

*கோதுமை மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை  டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து பிசைந்து, அதில் பூரி செய்தால் மிருதுவாக இருப்பதுடன் பூரி உப்பலாகவும் வரும்.

*வெண்டைக்காயில் புளித்த மோர் சேர்த்து பொரியல் செய்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

Previous article1 மணி நேரத்தில் முடியை வளரச்செய்யலாம்:! எப்படியென்று தெரிந்துக்கொள்ளுங்கள்!
Next articleகுடிக்கும் தண்ணீர் உடன் இந்த இலையை கலந்து குடியுங்கள் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்!