மாற்றுத்திறனாளிகளுக்கு  வெளிவந்துள்ள சூப்பர் நியூஸ்! வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் !! 

மாற்றுத்திறனாளிகளுக்கு  வெளிவந்துள்ள சூப்பர் நியூஸ்! வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் !! 

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் சூப்பரான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளின் நலன்களை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு மட்டுமில்லாமல், நிதி சார்ந்த உதவிகள் மற்றும் மானியங்களையும் வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதேபோல் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாற்றுத்திறனாளிகளுக்காக மதி அங்காடியை திறந்து வைத்தார் .

இதுப்பற்றி  மாவட்ட ஆட்சியர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை செய்து  வருகிறது. அதன்  ஒரு பகுதியாக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக அவர்களே விற்பனை செய்யும் வகையில்  மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதி எக்ஸ்பிரஸ் வாகனமானது  பேட்டரியில் இயங்கும் 3 சக்கரங்கள் கொண்ட 500 கிலோ வரை பொருட்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகும் . இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 முதல் 80 கி.மீ வரை செல்லும் . இந்த வாகனம்  மூலம் வணிகம் செய்ய ஆர்வமும், தகுதியும் உடைய மகளிர் சுயஉதவிக் குழுவை சார்ந்த மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர் மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் சேர்ந்திருக்கும் மகளிர் சுயஉதவிக்குழுவானது தொடங்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியாகி இருத்தல் அவசியம் .  மேலும் அந்த குழுவானது தேசிய ஊரக வாழ்வாதார இணையத்தில் கட்டாயம் பதிவு செய்து இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மதுரை புதுநத்தம் சாலை ரிசர்வ் லயன் பஸ் நிறுத்தம் அருகில் செயல்பட்டு வரும்  மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வருகின்ற 28-ஆம்  தேதிக்குள் வழங்க வேண்டும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.