ரூ. 101 இருந்தால் போதும்!! பான் கார்டில் இதை நீங்களே செய்யலாம்!!

0
122
Rs. 101 is enough!! You can do this yourself with PAN card!!
Rs. 101 is enough!! You can do this yourself with PAN card!!

ரூ. 101 இருந்தால் போதும்!! பான் கார்டில் இதை நீங்களே செய்யலாம்!!

மக்கள் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று தான் இந்த பான் கார்டு. நம்முடைய வங்கி எண், வருமான வரி கணக்கு என அனைத்துமே இந்த பான் கார்டில் தான் இணைக்கப்பட்டு வருகிறது.

எனவே வங்கி சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் இந்த பான் கார்டு தான் உதவும். தற்போது பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான தேதியும் வெளியிடப்பட்டது.

ஜூன் 30 வரை இதற்கு கால நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை ஆதார் கார்டுடன் இணைக்கக் கட்டணம் தேவை இல்லை. இவ்வாறு இணைக்கவில்லை என்றால் உங்கள் பான் கார்டு உதவாமல் போய் விடும்.

பான் கார்டில் பெயர், முகவரி ஆகியவற்றை சிலர் மாற்ற நினைப்பார்கள். ஆனால் ஆதார் கார்டில் மாற்றம் செய்ய தெரிந்தவர்களுக்கு பான் கார்டில் மாற்றம் செய்வது குறித்து தெரியாமல் இருப்பார்கள்.

பான் கார்டில் முகவரியை எவ்வாறு மாற்றுவது என்று குறித்து ஒரு உதாரணத்தை பின்வரும் குறிப்புகளில் தெரிந்து கொள்ளலாம்.
முதலாவதாக NDSL இணையதளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html சென்று, அப்ளிகேஷன் ஆப்ஷன் -க்கு சென்று change or correction in pan data என்பதை கொடுக்க வேண்டும்.

பின்பு category type என்பதில் தனிப்பட்ட விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதனையடுத்து தேவையான விவரத்தை நாம் தர வேண்டும். பிறகு captcha குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.

KYC ஐ தேர்ந்தெடுத்து புகைப்படம் மற்றும் கையொப்பம் இல்லாமல் தந்தை தாயின் விவரங்களை உள்ளிட்ட பிறகு, next for PAN card signature change or photo update- ஐ தர வேண்டும்.

பிறகு, ஐடி, பிறந்த தேதி ஆகியவற்றை இணைக்க வேண்டும். அடுத்து செக்பாக்சை டிக் செய்து விட்டு submit என்று தர வேண்டும். கடைசியாக பணம் செலுத்தும் ஆப்ஷனில் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பான் கார்டில் மாற்ற ரூபாய் 101 செலுத்திய பிறகு ஒப்புதலுக்கு 15 எண்கள் வரும்.

அடுத்து பான் சேவா பிரிவுக்கு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படும். இந்த 15 இலக்க எண்களை பயன்படுத்தி உங்கள் விண்ணப்பம் அடைந்த நிலையை கண்காணித்துக் கொள்ளலாம்.

author avatar
CineDesk