தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்!

0
90
Super news published by Tamil Nadu government! Rs 1000 scheme for heads of families started!
Super news published by Tamil Nadu government! Rs 1000 scheme for heads of families started!

தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்!

கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற  சட்ட மன்ற தேர்தலுக்கு அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கொடுத்தது.மேலும் தேர்தல் வாக்குறுத்திய திமுக கட்சி வெற்றி பெற்றால் மாதம் தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.

அதனையடுத்து அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்படும் என அறிவித்து ஆட்சி அமைத்த உடனே அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும்  அவை வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திமுக கூறியது அனைத்தும் பொய்யான வாக்குறுதி தான் எனவும் கூறி வருகின்றனர்.அப்போது அரசு தரப்பில் இருந்து விரைவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என பதில் அளித்தனர்.

மேலும் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க குழு ஒன்று அமைக்கப்பட்டது.இந்த குழுவுடன் இரண்டு தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது குடும்பத்த தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.அந்த ஆலோசனையில் முடிவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் தேதி குடும்பத்தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K