பெண்களுக்கான சூப்பர் சலுகை!! தொழில்முறை கிரைண்டர் வாங்க 50% மானியம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

பெண்களுக்கான சூப்பர் சலுகை!! தொழில்முறை கிரைண்டர் வாங்க 50% மானியம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Gayathri

Super offer for women!! 50% subsidy on buying a professional grinder.. Tamil Nadu government's action announcement!!

தமிழகத்தை பொறுத்தவரை பெண்களின் உயர்வு மற்றும் அவர்களுடைய முன்னேற்றம் குறித்த பல்வேறு நலத்திட்டங்கள் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாது பல்வேறு திட்டங்களின் மூலமாக பெண்களுக்கு மானிய தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு உதாரணமாக சுயதொழில் தொடங்க 50,000 ரூபாய் மானியம் மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் 18,000 ரூபாய் வரை நிதி உதவி சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் மற்றும் 50% மானியம் என பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக தமிழக அரசு வழங்கி வருகிறது.

அதோடு கூட, தற்பொழுது தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மகளிருக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும் புதிய முயற்சிகளையும் எடுத்துள்ளது. அதன்படி தான் 2000 மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்க கூடிய வணிக ரீதியான கிரைண்டர்களை வாங்க தமிழக அரசின் திட்டத்தின் மூலமாக 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.

உலர் மற்றும் ஈர மாவு அரைக்கக் கூடிய வணிக ரீதியான கிரைண்டரை வாங்குவதற்கு 10,000 ரூபாய் செலவாகும் என்றால் அதில் 50% மானியமாகவோ அல்லது 5000 ரூபாய் தொகையை மானியமாகவோ வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய மகளிர் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கைம்பெண்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.