12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் படிப்பும்.. படித்து முடித்த பின்பு வேலை வாய்ப்பு வழங்க கூடிய புதிய திட்டத்தினை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது.
இதனுடைய முதல் கட்டமாக திருநெல்வேலி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தங்களுடைய கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவிகளுக்காக புதிய மற்றும் பயனுள்ள டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த படிப்பானது ” சம்பாதிக்கும் போதே கற்றுக்கொள் ” என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகவும் TP சோலார் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பாடப்பிரிவில் டிப்ளமோ தொழில்நுட்ப கல்வி வழங்கப்பட இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பு 3 ஆண்டு கால அளவை கொண்டிருக்கிறது. முதல் 3 மாதங்கள் வகுப்பறையில் பாடமும் அடுத்த 9 மாதங்கள் நேரடியாக தொழிற்சாலையில் பயிற்சி என பிரித்து வழங்கப்பட இருப்பதாகவும் அதன் கூடவே பயிற்சி காலத்தில் மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக 10,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாண்டு 4000 ரூபாயும் இரண்டாவது ஆண்டு 4250 ரூபாயும் மூன்றாவது ஆண்டு 4500 ரூபாய் என உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் படிக்கும் பொழுதே மாணவிகள் பயன்பெறுவதோடு படித்து முடித்த பின்பும் வேலை வாய்ப்பை உறுதி செய்து தரக்கூடிய சிறந்த திட்டமாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது. மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த படிப்பு வடிவமைக்கப்பட்ட இருப்பதாகவும் மாணவிகளுக்கு எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்புகள் அமையும் என்றும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு,
திருநெல்வேலி அரசு பாலிடெக்னிக்
தொலைபேசி எண் – 0462 2984564.