‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு!

0
170

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இந்த படத்தில் ஏற்கனவே சிறுத்தை சிவா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, மீனா, சூரி, டி இமான், ஆகியோர்கள் இணைந்திருப்பதாக அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்றைய மாஸ் அறிவிப்பாக இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு கூடிய ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது. தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கி வரும் அல்லது மார்ச் மாதத்துக்குள் முடிக்க இயக்குனர் சிறுத்தை சிவா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleகடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!
Next articleமும்பையில் இன்று மூன்றாவது போட்டி இந்தியாவில் ஆடும் லெவெனில் யார்? யார்?