அண்ணாத்தையை சந்தித்த அண்ணாச்சி! வைரலாகும் இரு துருவங்களின் திடீர் மீட்டிங்!

0
173
Rajini
Rajini

உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமாவில் புதுமுகமாக அறிமுகமாக உள்ள சரவணா ஸ்டோர் அருள் சரவணனை சந்தித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஓட்டுமொத்த இந்தியாவையும் கடந்து ஒலிக்கும் பெயர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் எளிமையைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த போது கடந்த டிசம்பரம் மாதம் அங்கு பணியாற்றிய 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

இடையில் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ஓய்வில் இருந்தார்.இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இம்மாதம் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களும் படப்பிடிப்பில் பங்கேற்றன. இன்னும் ஒரு மாதத்திற்கு ஷூட்டிங் நீடிக்கும் என தெரிகிறது.

Rajinikanth

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும், புதுமுக நடிகருமான அருள் சரவணனை சந்தித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர் ஜேடி-ஜெர்ரி படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக புரொடக்‌ஷன் நம்பர் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங்கும் இம்மாதம் தான் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் இதில் சரவணனுக்கு ஜோடியாக, மாடல் நாயகி கீத்திகா திவாரி நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னையில் உள்ள பிரபல சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இருவரது ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடந்து வரும் நிலையில், இந்த திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ரஜினியும், அருள் சரவணனும் சந்தித்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

Previous articleமீண்டும் முதலில் இருந்தா..? – சர்வதேச விமான சேவைக்கு ஏப்.30 வரை தடை..!
Next articleலயோலா கல்லூரி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!