லயோலா கல்லூரி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

0
91

நாடாளுமன்றத் தேர்தலும் அல்லது சட்டசபை தேர்தலை 5 வருடத்திற்கு ஒருமுறை எந்த தேர்தல் வந்தாலும் கருத்துக் கணிப்பு என்பது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ எந்த கட்சியாக இருந்தாலும் தனக்கு சாதகமான ஒரு சில ஊடகங்கள் போன்றவற்றை வைத்து தங்களுக்கு சாதகமான கருத்துக்கணிப்புகளை வைத்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் தமிழகத்தின் மக்களுடைய மனநிலையை மாற்றும் வல்லமையைத் ஒவ்வொரு கட்சியினரும் பெற்று இருக்கிறார்கள்.

அந்த விதத்தில் சமீபத்தில் திமுகவைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பச்சமுத்து அவர்களின் தொலைக்காட்சியான புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டது .இந்தக் கருத்துக் கணிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் இணையதள பயன்பாட்டாளர்கள் பல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் லயோலா கல்லூரி இந்த வருடம் எந்த ஒரு கருத்து கணிப்பும் நடத்தவில்லை நாடாளுமன்றத் தேர்தல் ஆக இருந்தாலும் சரி, சட்டசபை தேர்தல் ஆக இருந்தாலும் சரி, இந்த லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறதோ அதன்படி தான் அந்த தேர்தலின் முடிவு இருக்கும் இது வெகு காலமாக நடந்து வருகிறது.

அதனாலேயே தேர்தல் நேரம் என்று வந்துவிட்டால் இந்த கல்லூரியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் எவ்வாறு இருக்கிறது என்று பெரிய பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாதாரண பாமர மக்கள் வரையில் எல்லோரும் உற்றுநோக்க தொடங்கினார்கள்.

ஆனால் இந்தமுறை அந்த கல்லூரி எந்த ஒரு கருத்து கணிப்பும் நடத்தவில்லை என்று தெரிவித்திருக்கிறது. அந்த கல்லூரி நிர்வாகம் அளித்திருக்கின்றன அறிக்கையில் லயோலா கல்லூரி இந்த வருடத்திற்கான தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் தேர்தலில் எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பான விமர்சனங்களை கொடுப்பதில் கல்லூரி நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும், எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது என்பதை தெள்ளத்தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே எங்களுடைய கல்லூரியின் பெயரில் அறிக்கைகள் ஏதேனும் வெளியிடப்பட்டால் ஊடகங்களில் இருக்கக்கூடிய நண்பர்கள் அந்த அறிக்கையினை புறக்கணித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நிலவரம் வெளியிட சென்னை லயோலா கல்லூரி என்ற பெயரை பயன்படுத்தும் தனி நபர்களையும் மற்றும் மன்றங்களையும் கடுமையாக எச்சரிக்கை செய்கிறோம் என்று தெரிவிக்கப்படுகிறது.இதுவரையில் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் இந்த லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது அது மக்களிடையே விரிவான அளவில் பிரபலம் அடைந்து இருக்கிறது. அதேபோல தமிழக அரசியலில் பல மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறது.

ஆனால் அவ்வாறு இவ்வளவு பிரபலமான ஒரு கல்லூரி திடீரென்று அதன் கருத்துக்கணிப்புகளை ஏன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது.அதோடு தற்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய சூழ் நிலை எவ்வாறு இருக்கிறது என்றால், தமிழகம் முழுவதிலும் அதிமுக வெகுவான வரவேற்பை பெற்று இருக்கிறது அதே போல திமுக பெரிய அளவில் தமிழகத்தில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று திமுக பல சித்து விளையாட்டுக்களை தமிழகத்தில் செய்து வருகிறது.

அதில் ஒன்று தான் இந்த கருத்துக்கணிப்பு ஒருவேளை லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புக்களை நடத்தியிருக்கலாம் அதில் ஆளுங்கட்சிக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கலாம் அதன் காரணமாக, ஏதோ ஒரு முக்கிய காரணத்தை வைத்து தான் இந்த கல்லூரி நிர்வாகம் இவ்வாறு ஒரு முடிவை எடுத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.இந்த கல்லூரி கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ன சொல்கிறதோ அதைவிட வரும் ஆறாம் தேதி தமிழக மக்கள் சொல்லும் தீர்ப்பு வெளியாகும் மே மாதம் இரண்டாம் தேதி எந்த மாதிரியான தீர்ப்பை அந்த மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்து விடும் அதனால் அதுவரை அமைதியாக காத்திருப்போம்.