பிரதமர் மோடியின் அறிவிப்பினை மக்கள் கடைபிடிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Photo of author

By Parthipan K

பிரதமர் மோடியின் அறிவிப்பினை மக்கள் கடைபிடிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை . இந்தியாவில் இதுவரை 298 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து கொரோனா பரவுதலை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்காகவும் பிரதமர் மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பினை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி உள்ளார். இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாடு முழுவதும் நாளை நடத்தப்படும் ஊரடங்கு உத்தரவுவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் மிகச் சிக்கலான மூன்றாம் நிலை பொருளாதார சமூக பரவலை தடுக்க நாடு தயாராகி வருகிறது.
கொரோனா வைரஸை தடுக்க இதே போன்ற தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்தது. ஆனால் மக்களிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்காததால் அரசின் முயற்சிகள் தோல்வியடைந்தன.

இந்த நோய்க்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி விட்டனர் இதேபோன்ற நெருக்கடியான நிலை இந்தியாவிலும் ஏற்பட வேண்டாம்.அதனால்தான் ஒவ்வொருவரும் இந்த ஊரடங்கு உத்தரவை ஏற்று கொண்டு வீட்டிலேயே இருப்பது மற்றும் சமூக தொடர்பில் இருந்து விலகி இருப்பது ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற நெருக்கடியான காலகட்டங்களில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆகியோரை நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டும். இதனால் நாளை மாலை 5 மணி அளவில் நடைபெறும் இறைவணக்கத்தில் பங்குபெற வேண்டும் . இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.