அடிதூள் சூப்பர் அப்டேட்! இனி வாட்ஸ்அப் chat-lock செய்து கொள்ளலாம்

Photo of author

By Parthipan K

அடிதூள் சூப்பர் அப்டேட்! இனி வாட்ஸ்அப் chat-lock செய்து கொள்ளலாம்

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, வாட்ஸ்அப் செயலியை வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் புது புது வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்கிறது. தற்பொழுது வாட்ஸ்அப் chat பக்கத்தை lock செய்யும்படி “chat-lock” என்ற வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வாட்ஸ்அப் chat-lock வசதியை பயன்படுத்தி விரல் ரேகை (Fingerprint) அல்லது பாஸ்கோர்டு (password) மூலமாக பயன்படுத்தி தனி நபர் chat-களை lock செய்துகொள்ளலாம், என்று வாட்ஸ்அப் நிறுவனம் இந்த புது வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்கள் அனுமதியை மீறி வெளிநபர்கள் யாரேனும் வாட்ஸ்அப்பை திறத்து பார்த்தாலும் நீங்கள்  lock  செய்துள்ள சாட்டை பார்க்க முடியாது. அதேபோல் மீடியா பைல்களையும் Hide செய்து வைக்கலாம் மேலும் lock  செய்துள்ள சாட்டிற்கு வரும் வீடியோ புகைப்படங்கள் உங்கள் Gallery-யில் save ஆகாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய அம்சம் பீட்டா வெர்ஷன் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தற்பொழுது இந்த வாட்ஸ்அப் chat-lock வசதி பொருத்தும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வாட்ஸ்அப் chat-lock வசதி விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.