மின்வாரியத்தின் சூப்பர் அப்டேட்!! இனி மக்களுக்கு செலவே இல்லை!!

0
227
Super Update of Power Board!! No more cost to people!!
Super Update of Power Board!! No more cost to people!!

மின்வாரியத்தின் சூப்பர் அப்டேட்!! இனி மக்களுக்கு செலவே இல்லை!!

புதிதாக ஒருவர் வீடு கட்டும் போது அப்பகுதியில் மின் கம்பங்கள் இருந்தால் அவருக்கு பிரச்சனையே இல்லை. ஒருவேளை மின் கம்பங்கள் இல்லாமல் அவருக்காக புதிதாக அமைக்க வேண்டும் என்றால் அதற்கு செலவு அதிகம்.

புது வீடு கட்டுபவர்கள் நிலத்தடி நீர் தோண்டி அதிலிருந்து தண்ணீரை எடுக்க மின்வாரிய அலுவலகத்தை நாடி, வணிக பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் முன் வைப்புத் தொகையை செலுத்த வேண்டும்.

இது நிர்வாக ரீதியான கட்டணம். இந்த கட்டணத்தில் மின்கம்பம் ஏற்றிவரும் வாகனத்தின் செலவு, கம்பம் நடுதல், மின் இணைப்பு வழங்கி கணக்கீடு மீட்டர் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கெல்லாம் சேர்த்து தான் இந்த கட்டணம் அடங்கும்.

ஆனால் தற்போது, மின்கம்பம் ஏற்றிவரும் வாகன வாடகை முதல் இணைப்பு வழங்க வரும் ஊழியர்களுக்கு டீ, காபி, காலை உணவு, மதிய உணவு, பொக்லைன் வண்டிக்கான செலவு, மேலும் பணிகளை சிறப்பாக செய்ததற்காக ஊழியர்களுக்கு சிறப்பு தொகை என மின் இணைப்பு பெற விரும்புபவர் ரூ.25 ஆயிரம் செலவு செய்ய வேண்டும். இது வீடுகளுக்கு மட்டும் தான்.

இதுவே விளைநிலங்களுக்கு செலவு இன்னும் அதிகமாக இருக்கும். மின்கம்பம் ஏற்றிவரும் வாகன வாடகை முதல் இணைப்பு வழங்க வரும் ஊழியர்களுக்கு டீ, காபி, காலை உணவு, மதிய உணவு, பொக்லைன் வண்டிக்கான செலவு, மேலும் பணிகளை சிறப்பாக செய்ததற்காக ஊழியர்களுக்கு சிறப்பு தொகை என வீடுகளை விட விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு பெற இரண்டு மடங்கு செலவு ஆகும்.

இந்த முறையே தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் மும்முனை இணைப்பு பெற்ற விவசாயிகள் அவர்களது பகுதியில் உள்ள மின்மாற்றி ஏதேனும் பழுதடைந்து விட்டால் அதன் செலவை விவசாயிகள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மின்கம்பம் ஏற்றி இறக்க மற்றும் சிறப்பு ஊக்க தொகை முதலிய கூலிகளை கேட்க வேண்டாம் என்று மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இணைப்பு பெறுவதற்காக நுகர்வோருக்குத் தேவைப்படும் தளவாட பொருட்கள் அனைத்தையும் மின்வாரியம் தான் வழங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.

எனவே நுகர்வோரிடம் கூடுதல் பணம் கேட்பதை தவிர்க்க வேண்டும் என்றும், நுகர்வோரும் கூடுதல் தொகையை தர கூடாது என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Previous articleதமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் அனுமதி!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
Next articleதமிழகத்தில் புதிய நான்கு வழிச்சாலை!! கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசாணை வெளியீடு!!