டெலிகிராமின் சூப்பரான அப்டேட்!! குஷியில் பயனாளர்கள்!!
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற பல செயலிகளை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன்பு வரை இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
எனவே பயனாளர்களின் வசதிக்கு நன்மை செய்யும் வகையில் தினமும் ஏராளமான புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்துக் கொண்டே இருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைப்பது போல் இனி டெலிகிராமிலும் ஸ்டோரி வைத்துக்கொள்ள ஒரு புதிய பயன்பாட்டை டெலிகிராம் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
இந்த அப்டேட் கொண்டு வந்ததை டெலிகிராமின் நிறுவனர் அறிவித்துள்ளார். இது குறித்து இவர் கூறி இருப்பதாவது, இந்த அப்டேட் உலகம் முழுவதும் உள்ள எழுநூறு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் கோரிக்கையை செயல்படுத்தி முடிவு செய்திருப்பதாக கூறி உள்ளார்.
மேலும் இதற்கான பணிகள் அதி வேகமாக துவங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், ஜூலை மாதம் இறுதி தேதிக்குள் இந்த பயன்பாடு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் டெலிகிராம் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
இதனால் பயனாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும், இது நடைமுறைக்கு வந்து பிறகு இன்னும் நிறைய புதிய பயன்பாடுகள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.