சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரீலீஸ்!! மாஸ் அப்டேட்ஸ்!! 

Photo of author

By Amutha

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரீலீஸ்!! மாஸ் அப்டேட்ஸ்!! 

Amutha

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரீலீஸ்!! மாஸ் அப்டேட்ஸ்!! 

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், போன்ற படங்களை இயக்கியவர். இதில் மலையாள நடிகர் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருடன்  பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

முத்துவேல் பாண்டியன் என்ற அதிரடி கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஜெய்லராக நடித்துள்ளார். அதிரடி சண்டை காட்சிகள்  நிறைந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் காரணமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் வரும் காவலா என்ற பாடலை அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார். மேலும் இந்த அறிவிப்பானது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.