எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!

0
303
#image_title

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!

கடந்த ஒன்பது மாதமாக தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு என்றால் அது அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனை தான் , ஜெயலலிதா மறைவிற்கு பின் பொது செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என, எடப்பாடி தரப்பு கூறி வந்தாலும் அவற்றுக்கு தடை ஏற்படுத்தி தங்களை தான் முன்னிறுத்த வேண்டும் என கூறி பன்னீர்செல்வம் தரப்பினர் கூறிவந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் எடப்பாடி தரப்பினர் பொதுக்குழு கூட்டி கட்சியின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். இதையடுத்து இரு பிரிவினர் இடையே மாறி மாறி குற்றம்சாட்டி அணி மாறி கொண்டிருந்தனர் . இதில் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த மருது அழகுராஜ் ஓபிஎஸ் அணிக்கு சென்றார்.

ஓபிஎஸ் அணிக்கு சென்ற மருது அழகுராஜ் ஒவ்வொரு நாளும் எடப்பாடியை சீண்டி வந்தார் . இந்நிலையில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ஓபிஎஸ் எப்போதுமே தான் என்ற கர்வத்தில் இருந்ததில்லை, கட்சியினரிடையே என்றுமே கடுமையான வார்த்தைகளை பேசியதோ. வளர்த்துவிட்ட கட்சியை திருட நினைத்ததோ இல்லை.

புரட்சி தலைவி அம்மா அவர்கள் அடையாளம் கட்டியதற்காக தனக்கென ஒரு தனி அணியை உருவாக்கி, தன்னுடைய ஆட்களை வைத்து முதல்வர் பதவியை அடையவில்லை, முதல்வர் இருக்கையில் அமர்ந்து கொண்டு சாதி பற்றி பெருமை பேசியது இல்லை, பேச்சிலே இனிப்பை தடவி உள்ளத்தில் வஞ்சகத்தை நிலை நிறுத்தவில்லை. காலில் விழுந்து பதவியை வாங்கிகொண்டு சகட்டுமேனிக்கு திட்டவில்லை.

ஒற்றை தலைமை என்று கூறி ஊரையும், கட்சி தொண்டனையும் ஏமாற்றி, கொலை குற்றங்களில் ஈடுபட்டு துரோகி என்னும் பழி சொல்லுக்கோ அல்லது கட்சி நிதியை தவறாக பயன்படுத்தவில்லை, அம்மா அவர்கள் ஒப்படைத்த பதவியை மீண்டும் அம்மாவிடமே ஒப்படைத்தார், தானே வைத்துக் கொண்டு பெருமை பேசிக்கொள்ளவில்லை.

கட்சியின் பணத்தை திருடி கடைசியில் கட்சியை திருடி அதில் சம்பந்தமில்லாத ஆட்களை வைத்து பிழைப்பு நடத்தி சம்பந்தமில்லாத கணக்குகளை காட்டி தன்னை நிலைநிறுத்த வில்லை, கழகமே கோவில் அம்மாவே தெய்வம் என்று வாழ்ந்து வரும் ஓபிஎஸ் தான் எங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று மருது அழகுராஜ் கூறினார்.

Previous article2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் – பிரசாந்த் கிஷோர்!!
Next articleகொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா கவலை வேண்டாம்! சிறிய வெங்காயம் இருந்தால் போதும்!