அந்த இருவர் செய்த முக்கியமான ஒரு காரியத்தால்! மனம் நெகிழ்ந்து போன முதல்வர்!

Photo of author

By Sakthi

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் சென்ற அக்டோபர் மாதம் 12ம் தேதி இயற்கை எய்தினார்.

அதன் அடிப்படையிலெ இந்த ஆண்டு தீபாவளி என்பது இல்லை.

ஆனாலும் அவர் முதல்வர் என்ற காரணத்தினாலே மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

தீபாவளிக்கு முதல் நாள் முதல்வரின் தாயார் இறந்த முப்பதாவது நாள்.

அன்றைய தினம் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் என பலரும் முதல்வரின் வீட்டில் குவிந்திருந்தன.

அக்கூட்டத்தின் கடைசியில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் புதுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் ராஜசேகரனும் நின்றிருந்தார்கள்.

கதவைத் திறந்து வெளியே வந்த முதலமைச்சருக்கு அனைவரும் மரியாதை செலுத்தினார்கள் அனைவருக்கும் வணக்கம் என்று கூறிய முதல்வரின் கண்ணீர்கள் சட்டென பட்டது. அந்த சிலை அது அவருடைய தாயின் சிலை.

சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், என்று வரிசையாக நின்று இருக்க அவர்களை எல்லாம் கடந்து அந்த வெண்கல சிலையை வைத்து கொண்டு நின்று கொண்டிருந்த ராஜசேகரனையும் , நெவளி நாதனையும், கூப்பிட்டார் முதலமைச்சர்.

அந்த சிலையை வாங்கிக்கொண்ட முதல்வர் அன்னையைப்போல் ஒரு தெய்வம் இல்லை, என அந்த சிலையில் எழுதி இருந்ததை படித்துப்பார்த்துவிட்டு உடனடியாக தன் குடும்பத்தினரை அழைத்து அந்த சிலையை பூஜை அறையில் வைக்குமாறு கூறினார்.

உடனே அந்த இருவரிடமும் நல்ல நாளில் இதை கொடுத்திருக்கிறீர்கள் என தட்டிக்கொடுத்திருக்கிறார் முதல்வர்.