தடுப்பூசி போடுவதில் புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் தமிழகம்! மா சுப்பிரமணியன்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, தொடக்கத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத பொதுமக்கள் அதன்பின்னர் விழிப்புணர்வு ஏற்பட்டதன் விளைவாக, மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தொடங்கினார்கள், இதன் மூலமாக நோய் தொற்று நோய் பரவல் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி நோய் தொற்று பரவ கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநில அரசு. அதேபோல மாநிலம் முழுவதும் அதிவேகமாக தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுவரையில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நேற்று வரை நான்கு கட்டங்களாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பல லட்சம் நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திருபுவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தடுப்பூசி முகாமை ஆரம்பித்து வைத்தார், அதன்பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வாரத்தில் 4 தினங்களும் திறக்கப்பட்டு இருக்கின்ற கோவில் படிப்படியாக முழுமையாக திறக்கப்படும் என கூறியிருக்கிறார்.

62% நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது, வரும் 20-ஆம் தேதிக்குள் 70% நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். சுகாதார அமைப்பு அறிவித்ததன் அடிப்படையில் 70% தடுப்பூசி போடப்பட்டால் மூன்றாவது அலையை எளிதில் வெற்றி கொள்ளலாம், சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் 10 லட்சத்து 70 ஆயிரத்து 700 பேர் இருக்கிறார்கள், இதில் முதல் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 55 ஆயிரத்து 247 நபர்களுக்கு செலுத்தப்படுகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 980 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது, மாவட்டம் முழுவதும் 700 முகாம்களில் சுமார் 42 ஆயிரத்து 940 தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது என கூறியிருக்கிறார் சுப்பிரமணியன். அதோடு இந்த தடுப்பூசி முகாமில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி, சட்டசபை உறுப்பினர் தமிழரசி வட்டார மருத்துவ அலுவலர் சேதுராமன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.