பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி வழங்கிய உச்ச நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி வழங்கிய உச்ச நீதிமன்றம்!

Sakthi

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் நடத்தி தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே கட்சியில் தொடர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்க்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை துரைசாமி சுந்தர மோகன் உள்ளிட்ட இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. இது இல்ல தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது. செல்லும்.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட முடியாத நிலையில், இரு தலைவர்களும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட முடியாது. இரு தலைவர்களும் ஒன்றிணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும் என தீர்ப்பு வழங்கினர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதற்கும் விதமாக பன்னீர்செல்வம் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர் இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அமர்வில் இன்று விசாரணை கேட்டுக் கொள்ளப்பட்டது.

அப்போது இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும்போது பொதுச்செயலாளர் தேர்தலுக்கு என்ன அவசரம்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு அதிரடி தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் தசரா விடுமுறைக்கு பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் ஜூலை மாதம் 16ஆம் தேதி பொதுக்குழுவுக்கு எதிரான பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய நோட்டீசுக்கு பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது.