உச்சநீதிமன்றம்: தெரு நாய்க்கு நீங்கள் தான் சாப்பாடு வைக்கிறீர்களா! அப்போ அது யாரையாவது கடித்தால் அதற்கான பொறுப்பு நீங்க தான் !
அனைத்து ஊர்களிலும் தெரு நாய்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. இந்த தெரு நாய்கள் பொதுமக்களை பாதிக்காத வகையில் இருப்பது நல்லது. வரப் போகும் பொது மக்களை வெறிகொண்டு கடித்து விடுவதால் பலர் உயிரிழந்தும் விடுகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டது எனக் கூறி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் கடந்த மாதத்தில் மட்டும் கேரளாவில் நாய்கள் கடித்து எட்டு பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு கூட 12 வயது சிறுமி நாய் கடித்து உயிர் இழக்க நேரிட்டது. இவ்வாறு இருக்கையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு அமர்வுக்கு வந்த நிலையில், நீதிபதி கூறியது, பொதுமக்களில் பலர் தெருவில் சுற்றுத் திரியும் நாய்கள் பட்டினியால் வாடுகிறது என எண்ணி உணவு வழங்குகின்றனர். அதை எண்ணுபவர்கள் அந்த நாய்க்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதையும் என்ன வேண்டும்.
அதனால் இனிவரும் நாட்களில் தெரு நாய்களுக்கு உணவு வழங்குபவர் தான் அதற்கான தடுப்பூசி செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு மட்டுமின்றி தெரு நாய்கள் யாரேனும் கடித்தால் அதற்கான முழு பொறுப்பையும் அவர்களே தான் ஏற்க வேண்டும். கடிபட்டவர்களின் மருத்துவ செலவு என அனைத்தையும் நாய்க்கு உணவு வைப்பவர்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கண்டறிந்து கால்நடை பராமரிப்பு துறை தனியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய் கடித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் மற்றும் நாய்கள் கடித்து பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சார்ப்பில் குழு அமைக்கப்பட்டது.இந்த ஆண்டில் மட்டும் 1 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்படைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.