பொதுவாக அரசு பேருந்துகளில் தற்காலங்களில் நடத்துனர்கள் மீது குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகின்றது. ஏசி பஸ்பலில் எல்லாம் நடத்துனர்கள் குறிப்பிட்ட ஸ்டாப்பிங் ஏறி டிக்கெட் எடுத்து பின்னர் இறங்கி விடுகிறார்கள். அதற்கிடையில் வேறு யாரையும் ஏற்றவும் இயலாது. நீண்ட தூர பயணம் செய்பவர்கள் இந்த பஸ் வழித்தடத்தை வரவேற்கின்றனர். ஆனால் இடைப்பட்ட ஊருகளுக்கு தேவையான பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதையும் தாண்டி பஸ்ஸில் ஏறி விட்டார்கள் என்றால் அவர்கள் இடைப்பட்ட ஸ்டாப்பிற்கான ஊருக்கு டிக்கெட் எடுத்தால் அவர்களால் உட்கார முடியாது. கடைசி ஸ்டாப்பிங்கில் இறங்கும் மக்களுக்கே அரசு பஸ் ஊழியர்களும் முன்னுரிமை வழங்குகின்றனர். இடைப்பட்ட ஊர்க்காரர்கள் ஏறினாலும், அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றால் அவர்கள் கடைசி ஸ்டாப்பிற்கான டிக்கெட் கட்டணத்தை செலுத்தி ஆக வேண்டும். கூட்ட நேரத்தில் அரசு பேருந்து நடத்துனர்கள் இவ்வாறு செய்து மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்குகின்றனர். இதனால் பொதுமக்கள் அரசு பேருந்து தளமே இவ்வாறு செய்தால் நாங்கள் என்ன செய்வது என்று புலம்பி வருகின்றனர்.
இது குறித்து போக்குவரத்து கழகத்திலிருந்து, பயணியர் எந்த ஒரு கவலையும் பட தேவையில்லை இவ்வாறு கூறும் நடத்துடர்களின் வாகன எண்களையும், அந்த பஸ் இருக்கான வழித்தடம் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டால் அந்த நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். நடத்துனர் மீது புகார் அளிக்கப்படுமெனில் விரைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளது.