வணங்கான் படத்தை சுத்தமாக கண்டுகொள்ளாத சூர்யா… வெற்றிப்பட இயக்குனரோடு மீண்டும் கூட்டணி!

Photo of author

By Vinoth

வணங்கான் படத்தை சுத்தமாக கண்டுகொள்ளாத சூர்யா… வெற்றிப்பட இயக்குனரோடு மீண்டும் கூட்டணி!

Vinoth

வணங்கான் படத்தை சுத்தமாக கண்டுகொள்ளாத சூர்யா… வெற்றிப்பட இயக்குனரோடு மீண்டும் கூட்டணி!

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யாவுக்கு தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது சூரரைப் போற்று திரைப்படம். இதையடுத்து அவர் நடித்த ஜெய் பீம் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைய, நீண்ட நாட்களுக்கு பிறகு தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர் பால்வோடு வணங்கான் படத்தில் இணைந்தார்.

அந்த படம் ஒரு மாதத்துக்கும் மேலாக ஷூட்டிங் நடந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் சூர்யா- சிறுத்தை இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்க, வெற்றி ஒளிப்பதிவாளராக பணியாற்ற, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். வரலாற்றுப் படமாக இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “இந்த படம் ஒரு பேன் இந்தியா படமாக 10 மொழிகளில் ரிலீஸ் ஆகும்” எனக் கூறியுள்ளார். இதுவரை இந்த படத்துக்கு தலைப்பு அறிவிக்கப்படாததால் சூர்யா 42 என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இதை முடித்து விட்டு சூர்யா மீண்டும் பாலா படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது சூர்யா மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதனால் சூர்யா பாலாவின் வணங்கான் படத்தை மீண்டும் தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.