சூர்யா & ஹரி வீசும் ’அருவா’! மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி !

சூர்யா & ஹரி வீசும் ’அருவா’! மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி !

சூர்யாவின் 39 ஆவது படத்தை அவரின் ஆஸ்தான இயக்குனர் ஹரி இயக்க, ஆஸ்தான தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார்.

சூர்யா கடைசியாக சிங்கம் 2 படத்தின் மூலம் வெற்றிக்கனியை ருசித்தார். அதன் பின் பல ஆண்டுகளாக அவரது படங்கள் சோபிக்காமல் உள்ளன. இந்நிலையில் எப்படியாவது வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்று சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சூர்யாவின் 39 ஆவது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

இதற்காக அஜித்தை வைத்து வரிசையாக ஹிட் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா ஒப்பந்தமானார். ஆனால் அவர் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சூர்யாவை டீலில் விட்டு சென்றார். இதனால் சூர்யாவின் படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இப்போது சூர்யாவின் ஆஸ்தான இயக்குனரான ஹரி சூர்யா 39 படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூர்யா, ஹரி கூட்டணியில் ஆறு, வேல், சிங்கம்1, சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய 5 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சிங்கம் 3 ஐ தவிர மற்ற படங்கள் எல்லாம் வெற்றி படங்களாக அமைந்தன. இப்போது இருவருக்கும் ஒரு ஹிட் தேவைப்படும் நிலையில் அருவா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பி  ஏப்ரல் மாதம் தொடங்கி தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் தயாரிக்க, இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருக்கிறார். 

Leave a Comment