ஜெய்பீம் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்..உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்.!!

0
155

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இந்த படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர். மேலும், இந்த படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜெய் பீம் திரைப்படம் ஜாதி மற்றும் மற்றும் அரசியலை முக்கியக் கருத்தாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜெய்பீம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், நாளை மாலை 5 மணிக்கு ஜெய்பீம் திரைப்படத்தின் முதல் பாடலான பவர் பாடல் வெளியாக உள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Previous articleசாலைகளை பெயர்த்தெடுக்காமல் புதிய சாலைகள் போட்டால் புகார் தெரிவிக்கவும்! வெளியான புதிய உத்தரவு!
Next articleகத்ரீனா கைப், விக்கி கௌஷல் நிச்சயதார்த்தம்!