திரையரங்கு உரிமையாளப் போகும் நடிகர் சூர்யா… திடீர் ஆசை!

Photo of author

By Vinoth

திரையரங்கு உரிமையாளப் போகும் நடிகர் சூர்யா… திடீர் ஆசை!

நடிகர் சூர்யா சில திரையரங்குகளை லீசுக்கு எடுத்த நடத்த உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஓடிடிகளில் சூர்யா படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து திரையுலகில் தனக்கு திருப்புமுனையைக் கொடுத்த இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார்.

படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வணங்கான் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஏற்கனவே சூர்யா மேல் அதிருப்தியில் இருக்கும் திரையரங்க உரிமையாளர்களின் கோபம் அதிகமாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது சூர்யாவே சில திரையரங்குகளை லீசுக்கு எடுத்து நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான முயற்சிகளில் சூர்யா இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.