சூர்யா படத்துக்கும் பாகுபலி, KGF படங்களுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!

0
211

சூர்யா படத்துக்கும் பாகுபலி, KGF படங்களுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!

சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

சூர்யா- சிறுத்தை இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த படத்தில் திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்க, வெற்றி ஒளிப்பதிவாளராக பணியாற்ற, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். வரலாற்றுப் படமாக இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “இந்த படம் ஒரு பேன் இந்தியா படமாக 10 மொழிகளில் ரிலீஸ் ஆகும்” எனக் கூறியுள்ளார். இதுவரை இந்த படத்துக்கு தலைப்பு அறிவிக்கப்படாததால் சூர்யா 42 என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த படம் இதுவரை சூர்யா படத்தில் எந்தவொரு படத்த்க்கும் இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. பாகுபலி, கே ஜி எப் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களைப் போல இரண்டு பாகங்களாக உருவாக்க இயக்குனர் சிறுத்தை சிவா முடிவு செய்துள்ளாராம். அதில் ஒரு பகுதி பீரியட் படமாக உருவாக்கப்படும் என சொல்லப்படுகிறது. சிறுத்தை சிவாவின் கடைசி படமான அண்ணாத்த படமும், சூர்யாவின் கடைசி படமான ‘எதற்கும் துணிந்தவன்’ படமும் தோல்வி படமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…!
Next articleவிவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here