அடுத்த படமும் ஓடிடியிலா?… சூர்யாவின் ‘வணங்கான்’ பற்றி பரவும் தகவல்!

0
185

அடுத்த படமும் ஓடிடியிலா?… சூர்யாவின் ‘வணங்கான்’ பற்றி பரவும் தகவல்!

சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஓடிடிகளில் சூர்யா படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து திரையுலகில் தனக்கு திருப்புமுனையைக் கொடுத்த இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார்.

படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதையடுத்து இப்போது மற்றொரு முக்கியமான தகவல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி வணங்கான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகக்து. முன்னதாக சூர்யாவின் படங்கள் ஒடிடியில் வெளியானதால் திரையரங்க உரிமையாளர்கள் அவர் மேல் கோபத்தில் இருப்பதாகவும், அதனால் அவரின் படங்களை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யமாட்டோம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Previous article27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சல்மான்கான் & ஷாருக் கான்…. ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம் இந்தியிலா?
Next article“பிரிவதை தவிர வேறு வழியில்லை… இப்போது வலிமையாக உணர்கிறேன்…” விவாகரத்து குறித்து சமந்தா