ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் ஆன்டிபயாட்டிகள்:! பெற்றோர்களே அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!!

0
169

ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் ஆன்டிபயாட்டிகள்:! பெற்றோர்களே அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!!

பொதுவாகவே சிறிய குழந்தைகளின் சளி காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு ஆன்டிபயாட்டிகள் மருத்துவர்களால் கொடுக்கப்படுகின்றது.ஆனால் உண்மையாகவே இந்த ஆண்டிபயாட்டிகள் எப்படி வேலை செய்கின்றது? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா ? வேண்டாமா? என்பதனை தெரிந்து கொண்டு கொடுங்கள்!!

ஆன்ட்டிபயாட்டிகள் எப்படி வேலை செய்கின்றது என்பதனை முதலில் பார்த்து விடலாம்!!

ஆன்ட்டிபயாட்டிகள் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ஒரு மருந்தாகும்.
பாக்டீரியாவால் ஏற்பட்ட தொற்றுக்கு நம் ஆன்டிபயாட்டிகளை கொடுக்கும் பொழுது,நோயை உருவாக்கிய பாக்டீரியாவை அழித்து தொற்றை சரி செய்கிறது.எக்காரணத்தைக் கொண்டும் ஆண்டிபயாட்டிகள் வைரஸை அழிக்காது.வைரஸை வைரசால் மட்டுமே அழிக்க முடியும் என்பது அறிவியல் பூர்வ உண்மை.

ஏன் ஆன்டிபயாட்டிகள் குழந்தைகளுக்கு ஆபத்து?

பொதுவாகவே 5 வயது அல்லது ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பொதுவாக அடிக்கடி சளி,காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு மட்டுமே ஏற்படும்.பெரும்பாலும் இந்த சளி காய்ச்சல் வயிற்றுப்போக்கு வைரசினால் மட்டுமே ஏற்படக்கூடியது. ஆன்ட்டிபயாட்டிகள் பாக்டீரியாவை மட்டுமே அளிக்கக்கூடியது.இதனால் வைரஸினால் ஏற்பட்ட தொற்றுக்கு ஆண்டிபயாட்டிகளை கொடுத்தால் வேலை செய்யாது.இது மட்டும் இன்றி ஆன்ட்டிபயாட்டிகள் அதிக அளவு கொடுப்பதினால் நம் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழியக்கூடும்.இதுமட்டும்மின்றி இயற்கையாகவே நம் உடலில் உண்டாகும் எதிர்ப்பு சக்தியை செயல்பட விடாது.எனவேதான் சாதாரண சளி காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு மருத்துவர் அனுமதி இன்றி அதிக அளவில் நாம் ஆண்ட்டிபயாட்டிகளை கொடுக்கக் கூடாது என்று தேசிய குழந்தைகள் நல ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

ஆன்ட்டிபயாட்டிகள் கொடுத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன?

பொதுவாக இரண்டு வயதிற்கும் கீழே இருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்தால்,ஆஸ்துமா,சைனஸ் அலர்ஜி,தோளில் சிறிய சிவப்பு நிற தடிப்புகள் (தோல் அலர்ஜி)குடல் அலர்ஜி, உடல் பரும அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் இந்த ஆன்டிபயாட்டியால் விளையக் கூடும் என்று தேசிய பச்சிளம் குழந்தை நல மயம் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.நீங்கள் நம்பவில்லை என்றால் ஆய்வறிக்கையை கீழே புகைப்படமாக கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே உங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு டான்கிகளையோ ஆன்ட்டிபயாட்டிக்கலையோ கொடுக்கும் பொழுது சரியாக தான் கொடுக்கின்றோமா?என்று ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து கொடுங்கள்.
ஒவ்வொரு மருந்துமே ஏதோ ஒரு விதத்தில் பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியது என்பதனை மறவாதீர்கள்.அதேபோன்று உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் பொழுது அவர் குழந்தையின் நல மருத்துவராய் என்பதனை தெரிந்து கொண்டு அழைத்துச் செல்லுங்கள்.

author avatar
Pavithra